Thupparithal
அரசியல்

விரைவில் 6 அமைச்சர்களிடம் ரெய்டு.. அது தூத்துக்குடி அமைச்சராக கூட இருக்கலாம்- தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சூசகம்..!

தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், திமுக ஆட்சிக்கு வந்தபின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எந்த வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்றவில்லை. மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் வரிபணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படவில்லை
ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கட்டபஞ்சாயத்து செய்கின்றனர். காவல்
துறையினர் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. ஆட்சி அதிகாரம் கையில் வந்த பின் மக்களுக்கான எந்த திட்டமும் செய்யவில்லை கமிஷன், கரப்சன் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது.

பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என திமுக நினைத்தால் வரும் நாடாளுமன்ற
தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். திமுக அமைச்சர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததின் ஆதாரம் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. இன்னும் 6 அமைச்சர்களிடம் சோதனை நடைபெற உள்ளது..அதில் ஒன்று தூத்துக்குடி அமைச்சராக கூட இருக்கலாம். தூத்துக்குடியில் இரு அமைச்சர்கள் உள்ள நிலையில் வளம் படைத்த துறையில் உள்ள அமைச்சராக இருக்கலாம் என்று சூசகமாக தெரிவித்த அவர், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டும். அதில் ஊழல் நடைபெரும் பட்சத்தில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் புகார் செய்யப்படும்..

தமிழகத்தில் சாதி ஆணவ காதல் கொலைகள் நடைபெறுவது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டவர், உயிரை எடுப்பதற்கு பெற்றோர்களுக்கு உரிமை இல்லை என்றார். இதில் தமிழகம் பின்னோக்கி செல்வதை காட்டுகிறது.. முற்போக்கு சிந்தனை இல்லை என்றார்.

Related posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Admin

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தாசில்தாரிடம் சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Admin

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 70ஆயிரம் மரக்கன்று நடும் பணியை அமைச்சர், எம்.பி, மேயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!