தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வாக்குசாவடி முகவர்களுக்கான பட்டியல் மற்றும் மீன்வளம் மீனவர் நலன் – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பரிந்துரை கடிதத்தை சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் தாசில்தாருமான நிஷாந்தினியிடம் சண்முகையா எம்.எல்.ஏ, வழங்கினார்.
நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா, தூத்துக்குடி வடக்கு சுப்பிரமணியன், மத்திய ஒன்றியம் ஜெயக்கொடி, கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து மற்றும் கௌதம் ஆகியோர் உடனிருந்தனர்.