Thupparithal
அரசியல்

தலை இல்லாமல் வால் ஆடுகிறது என்று சொன்னால் அது தலையால் சொல்லப்பட்டு ஆடப்பட்டதா? இல்லை தானாக ஆடுகிறதா? அதிமுகவை சீண்டிய பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா.!

மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கொண்டு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் அக்கட்சி மகளிர் அணியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

பின்னர், பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்…. பெண்களுக்கு அரசியல் சுதந்திரத்தை கொடுக்கும் வகையில் வேறு எந்த கட்சியும் செய்யாத வகையாக நாம் அதை முடித்து வைக்க வேண்டும், 33 சதவீத இட ஒதுக்கீடை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றம் மற்றும் லோக்சபாவிலும், அதே போல் சட்டமன்றத்திலேயே மூன்றில் ஒரு பங்கு அதாவது 33% பெண்களுக்கு ஒரு அரசியல் முன்னேற்றத்தை பிஜேபி அரசாங்கம் வழங்கி இருப்பது மிக மிக பொன்னான விஷயம்.. இதன் மூலம் அதிகப்படியான பெண்கள் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பை பிஜேபி வழங்கி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெண்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மோடியினுடைய பிஜேபி அரசாங்கம் சரியான ஒரு முடிவை சரியான நேரத்தில் கொடுத்து எங்களுக்கு விநாயகர் சதுர்த்தி கிப்ட் மாதிரி…

பெண்களின் சுதந்திரத்தை பற்றி பேசிய பாரதி பிறந்த இந்த தூத்துக்குடி மண்ணில் இருந்து பாரத பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்று கொள்வோம், பேசுவோம்.. தலை இல்லாமல் வால் ஆடாது.. தலை இல்லாமல் வால் ஆடுகிறது என்று சொன்னால் அது தலையால் சொல்லப்பட்டு ஆடப்பட்டதா? இல்லை தானாக ஆடுகிறதா? எப்படி இருந்தாலும் தலை ஒழுங்காக இருந்தால் வால் ஒழுங்காக இருக்கும்.. மாநில தலைவர் சிறப்பான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க கூடியவர்.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்துறை கொடுக்காதது எதனால் என கேள்வி எழுப்பிய அவர், பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை தருவதாக கூறி குறிப்பட்ட பெண்களுக்கு தருவதற்கு காரணம், இந்தியாவிலேயே அதிக கடன் சுமை உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்… அதனால் தான் மகளிர் உரிமைத்துறை கொடுக்க முடியவில்லை.. அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளையும் இந்த ஒரே பணியை கொடுத்து டார்ச்சர் செய்கிரர்கள்.. அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை பணியை மட்டும் கொடுத்து துன்புறுத்தும் திமுகவை பெண்கள் வன்மையாக கண்டிக்கிறோம்…

அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்துறை கொடுக்கபடாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படாமல் வசதியாக உள்ளவர்களுக்கு கொஞ்ச பேருக்கு மட்டும் கொடுத்து விட்டு வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிற பெண்களுக்கு கொடுக்காததுக்கு காரணம் என்ன? ஆனால் அனைத்து பெண்களுக்கும் 33 சதவிகித இட ஒதுக்கீடு மோடி கொடுத்திருக்கிறார்.. ஆகவே, மகிழ்ச்சியாக உள்ளோம்… அதனால் அனைத்து பெண்களும் பிஜேபியின் பக்கம் வர வேண்டும்…திமுக மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் மக்களை வஞ்சித்து ஏமாற்றிவிட்டதாக கூறினார்…

Related posts

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தனர்.

Admin

அதிமுகவிலுள்ள ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளியவர வேண்டுமோ தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள்-அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் டிடிவி தினகரன் சூசகம்.. முழு பேட்டி..!

Admin

“கலைஞர் நூற்றாண்டு விழா” கோவில்பட்டியில் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டையை வாங்கி கொடுத்த நகர மன்ற உறுப்பினர்..!

Admin

Leave a Comment

error: Content is protected !!