Thupparithal
அரசியல்

“கலைஞர் நூற்றாண்டு விழா” கோவில்பட்டியில் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டையை வாங்கி கொடுத்த நகர மன்ற உறுப்பினர்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22 வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டின் பேரில் முதற்கட்டமாக 40 பெண்களும், இரண்டாம் கட்டமாக 37 பெண்களும், மூன்றாம் கட்டமாக இன்று 23 பெண்களும் மொத்தம் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக மனுதாரர்கள் விஏஓ ஆர் ஐ துணை சாசில்தார் மற்றும் தாசில்தார்களிடம் பரிந்துரை பெற்று மருத்துவ அட்டை வாங்க வீண் கால தாமதமும் அலைச்சலும் ஏற்படுவதால் கவுன்சிலர் அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுதாரர்களை நேரில் அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்தி மருத்துவ அட்டை பெற்றுத்தர உதவினார்.

இறுதி கட்டமாக தனது சொந்த செலவில் வேன் அமர்த்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மருத்துவ அட்டை பெற்று வர மனுதாரர்களை அழைத்துச் சென்றார். பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று தர உதவியாக இருந்த திமுக கவுன்சிலருக்கும் நகராட்சி சேர்மன்,மாவட்ட அமைச்சர், மற்றும் தமிழக அரசுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

தி மு கழகத்தின் இளம் சூரியனுக்கு பிறந்தநாள்; ஆட்டோவில் வாழ்த்து ஸ்டிக்கர்; இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் கலக்கல்!.

Admin

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி, எட்டயபுரத்தில் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!.

Admin

வியாபாரிகள் மத்தியில் திமுகவிற்கு நல்ல வரவேற்பு…. தூத்துக்குடியில் கனிமொழி-யை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து புதிய சகாப்தம் படைக்க பாடுபடுவோம்… மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு..!

Admin

Leave a Comment

error: Content is protected !!