Thupparithal
அரசியல்

கோவில்பட்டி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலயில், கயத்தார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வேலாயுதபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 10, லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை மற்றும் கே.துரைசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் ரூ.6.45 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டியன், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் ராமசுப்பு,

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,
வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, வேலாயுதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியப்பன், வர்த்தக அணி தலைவர் காமராஜ், கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், ராசு, செட்டிகுறிச்சி கிருஷ்ணசாமி அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, முருகன், கோபி, பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது- வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகனிடம் பொது மக்கள் கூறிய அந்த வார்த்தை……!

Admin

தமிழக அமைச்சர்கள் ரெய்டு; தலைகுனிய மாட்டோம்… தலை நிமிர்ந்து நிற்போம்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி….!

Admin

அதிமுக தனித்து நிற்க தயார் அதே போல திமுக மற்றும் அனைத்து கட்சியும் தனித்து நிற்க்க முடியுமா என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடல்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!