Thupparithal
செய்திகள்

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள்; பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டி அடித்த கிராம மக்கள்…!

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராமம் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர் அதிகம் வசிக்கும் கிராமமாகும்.. இந்த கிராமத்தை சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த மீன் கழிவு ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கழிவு மீன் நிறுவனங்கள் தங்கள் கழிவுகளை அருகே உள்ள குளங்களில் கொட்டுவதாலும், விளைநிலங்களில் கழிவுகளை லாரிகள் மூலம் இரவு நேரங்களில் திறந்து விடுவதாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்டவை அந்த கழிவுகளை தின்று இறக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது எனவும் இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது…

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்து கிராமத்தில் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் வாக்கு சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்…

அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல் ‘இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்’ இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சு வார்த்தை வேண்டாம் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம் பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்துள்ளனர்.. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது…

Related posts

டிச.31க்குள் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்; ஆட்சியா் தகவல்!.

Admin

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய அறுவை சிகிச்சை மையம் அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

Admin

கோயில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி இந்து மகா சபா சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

Admin

Leave a Comment

error: Content is protected !!