தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள உருளை குடி கிராமத்தில் காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அகில இந்திய இந்து மகா சபா சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் ஆரோக்கியம் தலைமையில், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோவில் முன்பு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நடவடிக்கை எடுக்க கோரியும், அந்நிலத்தை மீட்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு வழங்கிய நிலையில், அம்மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.