Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி, அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா அறிக்கையில் கூறியுள்ளதாவது; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால்களை பொது மக்களுக்கு குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையும் வண்ணம் அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் மாலை 07:30 மணி வரை பதிவு தபால் மற்றும் பார்சல் புக்கிங் சேவைகளும், மாலை 08:00 மணி வரை விரைவு தபால்கள் புக்கிங் சேவைகளும் அளிக்கப்பட்டு வருகிறது .

பொது மக்களுக்கு வசதியாக இந்த சேவை நேரத்தை குறிப்பிட்ட அஞ்சலகங்களில் நீடித்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதன்படி தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட நியூ காலனி மற்றும் போல்நாயக்கன்பேட்டை துணை அஞ்சலகங்களில் மாலை 06:00 மணி வரை பதிவு விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கால நீட்டிப்பு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதுஎனவே பொதுமக்கள் இந்த சேவையை பெற்று பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Related posts

நீச்சல் குறித்து விழிப்புணர்வு; நீச்சல் குளத்தில் மிதந்தவாறு 7 மணி நேரம் 30 நிமிடங்கள் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்து கலக்கிய சிறுவன்!.

Admin

தூத்துக்குடியில், நடிகா் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளில் வசந்தமாளிகை திரைப்படம் புதிய தொழில் நுட்ப முறையில் திரையிடப்பட்டது!.

Admin

மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு; வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் டம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!