Thupparithal
செய்திகள்

மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு; வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் டம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாத்தூர் சாலையில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 8ம் ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு யோகாசனத்தில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.

தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழக பொதுச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன் முன்னணியில் யோகாசனத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் செல்வராஜ், தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, தமிழ் கல்ச்சுரல் &யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் பொருளாளர் சிவ சக்திவேல் முருகன், மற்றும் கோமதி, கோபி, முருகன், உள்ளிட்ட மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தசரா குடில் அமைப்பதற்கு மின்வாரியம் சார்பில் வைப்பு தொகை; தசரா குழுவினர் உபயோகித்த மின் கட்டணத்தை கழித்து மீத தொகையை குழுவினரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் தூத்துக்குடி மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை…!

Admin

தூத்துக்குடி, அஞ்சலகங்களில் விரைவு மற்றும் பார்சல் தபால்கள் புக்கிங் செய்யும் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Admin

கோடைகாலம் தொடங்கியது உடலை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும்-தூத்துக்குடியில் நாற்பதாண்டு சேவையாற்றும் பிரபல மருத்துவர் அருள்ராஜ் விளக்குகிறார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!