உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவிலில் இந்த
ஆண்டுக்கான தசரா விழா 15.10.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மிகச்சிறப்பாக
நடைபெற்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திறகு பெருமை சேர்க்கும் இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து சிறு, சிறு தசரா குழுக்கள் அமைத்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம், பக்தர்கள் தங்களது ஊர்களில் தாங்கள் ஏற்கனவே வணங்கி வழிபட்டு வந்த ஊர் கோயில்களில் தேர் கூடம் அமைப்பது தொன்றுதொட்டு நடந்துவரும் முறையாகும்.
பக்தர்கள் வணங்கி வந்த ஊர் கோவில்களில் மின்சார இணைப்பு இருந்தாலும் புதியதாக
தற்காலிகமாக மின் இணைப்பு பெற வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மின்வாரியத்துறையும் மாவட்ட நிர்வாகமும் வற்புறுத்துகிறது. கடந்த ஆண்டு இவ்வாறு தற்காலிக இணைப்பு எடுக்காத
தசரா குழுவினருக்கு பல்லாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பக்தர்களுக்கு மிரட்டல் விடுவித்தது. மின்வாரியத்தினரின் வற்புறுத்தலின் பேரில் தற்காலிக இணைப்பு பெற்ற தசரா குழுவினருக்கு தாங்கள்
செலுத்திய டெபாசிட் தொகையில் அவர்கள் உபயோகித்த மின் கட்டணம் போக மீதி பணத்தை இன்றுவரை திருப்பி கொடுக்கவில்லை.
இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட டெபாசிட் தொகை சுமார் 40% அளவிற்கு உயர்த்தி
ஒவ்வொரு தசரா குழுவினரும் 12,482 ரூபாய் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்றும் அதில் தசரா குழுவினர் உபயோகிக்கும் மினசாரத்திற்கு கொள்ளை விலையாக ஒரு யூனிட்டிற்கு 12 ரூபாயும்
கணக்கிடப்படும் என்றும் பக்தர்களை வதைக்கும் விதமாக கூறுகின்றார்கள். மின்வாரியத்துறையின் இந்த நடவடிக்கை பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும் தசரா குழு கலாச்சாரத்ததை அழிக்கும் விதமாகவும் இருக்கிறது. இதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், இந்த ஆண்டு அநியாயமாக வசூலித்த
டெபாசிட் தொகையில் தசரா குழுவினர் உபயோகித்த மின் கட்டணத்தை கழித்து மீத தொகையை தசரா குழுவினரிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தசரா குழுவினரை
திரட்டி தூத்துக்குடி மின் வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்..