Thupparithal
அரசியல்

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் தினமும், காலையும், மாலையும் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்..

இந்நிலையில், இன்று மாலை போல் பேட்டை கிழக்கு, டிஎம்சி காலனி, ஆகிய பகுதிகளில் உள்ள வணிகர்கள், நடைபாதை கடைகள் மற்றும் பொது மக்களிடையே நடந்தே சென்று உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார் மேயர் ஜெகன்,

அப்போது, போல் பேட்டை கிழக்கு மெயின் ரோட்டில் உள்ள ஒரு பரோட்டா கடையில் வாக்கு சேகரித்த அவர், திடீரென கடைக்குள் நுழைந்து பரோட்டா மாஸ்டர் போல் திடீரென முட்டை-யை உடைத்து பின்னர், வெங்காயத்தை போட்டு கல்லில் விட்டு இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்ட ஆம்லெட்-யை சூட, சூட எடுத்தார்.. இது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Related posts

திமுகவை கண்டித்து தூத்துக்குடி மாநகர் 22வது வார்டு பகுதியில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Admin

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு; தேர்தல் காலத்தில் எதிர்ப்பை காட்டாமல் இப்போது காட்டுகிறார்கள்.. பின்னால் மறந்து விடுவார்கள்…சரத்குமார் தூத்துக்குடியில் பேட்டி…!

Admin

தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீரமாமுனிவர் மணிமண்டபத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!