தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா ஆலயம் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டமன்ற கூட்டத் தொடரில் வீரமாமுனிவர்க்கு திருவுருவச்சிலையுடன் மணிமண்டபம் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வீரமாமுனிவர் மணிமண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து காமநாயக்கன்பட்டியில் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் ஓபிஎஸ் அணி மாவட்ட பொருளாளர் முனியசாமி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னணியில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், கிளைச் செயலாளர்கள் கிறிஸ்திரியா தியாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன், சோழபுரம் முனியச்சாமி, பஞ்சாயத்து தலைவி கலைச்செல்வி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், அதிமுக நிர்வாகிகள் டேனியல், கடம்பூர் மாயா துரை,கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.