தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அத்தை கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆடி மாத கொடை விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய மாணவர் அணி பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அத்தை கொண்டான், கிளைச் செயலாளர் ஹேமலா, ஒன்றிய மாணவரணி இணைச் செயலாளர் விக்னேஷ், கிருஷ்ணா நகர் கிளைச் செயலாளர் சுப்புராஜ், 13 வது வார்டு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ், பஞ்சாயத்து துணைத் தலைவர் ரேவதி, பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி, தொழிலதிபர் ஜெயபிரகாஷ், தர்மர், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் அம்பிகைபாலன், வேல்ராஜ், அழகர்சாமி,ரோஜா, கோமதி, சந்திரசேகர், பழனிமுருகன், கடம்பூர் மாயா துரை, கடம்பூர் விஜி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.