Thupparithal
அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்; கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மறுசீராய்வு செய்து பெயர் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய மாவட்டச் செயலாளர் கூட்டம் கோவில்பட்டி கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, முன்னாள் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், மாநில வழக்கறிஞர் அணி பிரிவு துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி புதிய மாவட்டச் செயலாளர் முருகன்-யை முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கதிரேசன் கட்சி நிர்வாகியிடம் அறிமுகம் செய்து கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் பாஸ்டர் மோகன், விடுதலை இளைஞர் எழுச்சி பாசறை மாநில அமைப்பாளர் விமல் வங்காளியார், மண்டல அமைப்பாளர் முரசு தமிழப்பன், மண்டல துணை செயலாளர் மோட்சம், விடுதலை இளஞ்சிறுத்தை மாவட்டச் செயலாளர் பிரபாவாளன், விடுதலைச் சிறுத்தை மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், மகேந்திரன், செல்வகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அதிமுக ஓபிஎஸ் அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!.

Admin

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில், வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Admin

தூத்துக்குடி, எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகை அழிப்பு; மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!