தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்தார்.
அதன்படி, தூத்துக்குடி மாநகர மாவட்ட கழக செயலாளராக ஏசாதுரை, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக புவனேஸ்வரன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக வினோ பாலாஜி, ஆகியோர் நியமனம் செய்யப்படட்டனர்.
அதை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாநகர செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், முன்னாள் வட்ட செயலாளர் தங்கம், முன்னாள் வட்ட செயலாளர் தமிழரசன், வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் அந்தோணி செல்வராஜ், சாமுவேல், கருணாகரன், லிங்கராஜ் இசக்கி முத்து, மில்லர்புரம் ஜெயராமன், எஸ்.ஜெயபால், ஆறுமுகம், செல்வின், எம்.எஸ். மாடசாமி, ஹரிஷ், மட்டக்கடை மகேஸ்வரன், பி. ரமேஷ், முத்துப்பட்டான், சுதாகர், கே.எஸ். செல்லத்துரை, ரமேஷ், எம்ஜிஆர் இளைஞர் அணி பாசறை கணேசன், பேச்சியம்மாள், சசிக்குமார், கணேசன், சேவியர், ராஜேஷ், மற்றும் மகளிரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.