இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சி சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
சேப்பாக்கம் சட்ட உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நண்பகல் 3.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு மாவட்ட மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டையில் இன்று (20.11.2022) மாலை தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலத்துறை, மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை, அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், திமு கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார். அப்போது அவருக்கு கழக மகளிரணி யினர் பூரண கும்பம் மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ்,மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் மாவட்ட ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார்,தெற்கு மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், தெற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, திமுக தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் வெயில் ராஜ், நாகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன், துணை அமைப்பாளர் மகாலிங்க ராஜா, மற்றும் தெற்கு மாவட்ட திமுகழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், தெற்கு மாவட்ட பிரதிநிதிகள், மகளிரணி யினர், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.