Thupparithal
அரசியல்

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு பற்றி சந்தேகம்; தூத்துக்குடி மாநகர காங்கிரசாரின் நூதன போராட்டத்தில் கல்லுரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு அஞ்சல் போட்டியில் மனு!.

மத்திய அரசுக்கும், அதானி குழும்பத்திற்க்கும் இடையே உள்ள உறவு பற்றி தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பல்வேறு கேள்விக்கான? பதில்களை தெரிந்து கொள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் திரளான காங்கிரசார் தலைமை தபால் அலுவலகத்தில் மனுக்களாக அஞ்சல் பெட்டியில் போட்டனர்..

கேள்விகளான, பாஜகவுக்கு அதானி இது வரை எத்தனை கோடி நிதி கொடுத்துள்ளார்? உங்களின் அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணங்களை தொடர்ந்து அதானி எத்தனை ஒப்பந்தங்களை வென்றார்? உங்கள் சிறந்த நண்பர் உலகில் 609வது இடத்தில் இருந்து 6 ஆண்டுகளில் 2வது பணக்காரராக வருவதற்குகான மந்திரத்தை எங்களுக்கும் கூறுங்கள்? இந்த 3 கேள்விகளை தபால் கார்டில் அச்சிட்டு பிரதமர் மோடிக்கு முதற்கட்டமாக 2 ஆயிரம் கார்டுகள் அனுப்பபட்டனர்.

தொடர்ந்து, காங்கிரசார் தபால் கார்டுகளை பொது மக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு வழங்கி அவர்களும் ஆர்வத்தோடு பெற்று கையேழுத்திட்டு அஞ்சல் பெட்டியில் போட்டனர்.

இப்போராட்டத்தில், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மேற்கு, தெற்கு மண்டல தலைவர்கள் ராஜன் செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் C.D.விஜயராஜ், A.D.பிரபாகரன், அருணாசலம், தனபால்ராஜ், மாவட்ட பொது செயலாளர் சின்னகாளை, செயலாளர்கள் கோபால், காமாட்சிதனபால், ஆரோக்கியம், வெங்கடசுப்பிரமணியம் உள்பட பலர் உடனிருந்தார்.

Related posts

தூத்துக்குடி, கோவில்பட்டியில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!.

Admin

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி, எட்டயபுரத்தில் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!.

Admin

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

Admin

Leave a Comment

error: Content is protected !!