பாரதீய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மண்டல செயற்குழு கூட்டம் ஆறுமுக நேரியில் நடைபெற்றது. மண்டல தலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலா ளர் தங்கபாண்டி யன், துணைத் தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ராஜவேலன் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், பொதுச்செய லாளர் சிவமுருக ஆதித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகேச பாண்டியன், ஓ. பி.சி. அணி துணைத் தலைவர் மகேஷ், பாலாஜி, ஜெயக்குமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அடைக்கப்படும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை போக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஆறுமுகநேரியில் கூடுதல் மின் கம்பியா ளர்களை நியமிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேரூராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை தவிர்க்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.