குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வழக்கமாக காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 8 மணிக்கு காலை சந்திபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிகாலை பூஜை, நண்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 4மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு ராக்கால பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும். செவ்வாய், வெள்ளி இரவு 10 மணிக்கு திருக்காப்பிடுதல் நடைபெறும்.
ஆனால் நாளை 8-ந் தேதி (செவ்வாய்கிழமை) சந்திரகிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30மணிக்கு கோவில் நடைதிருக்காப்பிடப்பட்டு பின்பு இரவு 7மணிக்கு நடைதிறக்கப்படும். என கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.