தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என மேயர் ஜெகன் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார்..
இந்நிலையில், இன்று காலை குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள கரிசல் இலக்கிய பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்…
அதன்பின், எட்டயபுரம் ரோட்டில் உள்ள பிரபல தேனீர் கடையில் தேனீர் அருந்திய அவர் அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.. அதன் பின் தொடர்ச்சியாக, 4வது ரயில்வே கேட் அருகில் உள்ள வணிக நிறுவனங்களில் வணிகர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.