தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.. இவர் நெல்லை, குமரி மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முத்துநகர் கடற்கரை பூங்காவில் மேயர் ஜெகன் தலைமையிலான திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் திமுக வேட்பாளர் கனிமொழி-க்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்…
பின்னர், பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அவர், அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த மாணவர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கிரிக்கெட் விளையாடி அந்த பகுதியில் வாக்கு சேகரித்தார்…பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியிலும் வாக்குகளை சேகரித்தார்..