தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி சிவன் கோவில் தெரு, வடக்குரத வீதி, தெற்கு ரத வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் திமுக ஆட்சியின் 3 ஆண்டு கால சாதனை மற்றும் மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாநகர மக்களை மாநகராட்சி சார்பில் மற்றும் கனிமொழி எம்பி சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் நேரடியாக சென்று வழங்கியது மற்றும் மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மாநகரில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கூறி மீண்டும் கனிமொழியை வெற்றி வேட்பாளராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென நடந்தே சென்று திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்…
உடன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, கவுன்சிலர் சுரேஷ், கீதா முருகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிராபாகர் உள்ளிட்ட திமுக கட்சியினர் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்…