தூத்துக்குடி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக வைத்தியர் சிவசாமி வேலுமணி களம் இறங்கியுள்ளார்.. இவர், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதனின் சொந்த மருமகன் ஆவார். இந்த நிலையில் நேற்று தென்திருப்பேரையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளரான தனது மருமகன் சிவசாமி வேலுமணியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிக் கொண்டிருந்த வேட்பாளர் சிவசாமி வேலுமணி நான் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிடும் நபருக்கு தேர்தலுக்காக நான் முழு செலவையும் ஏற்பேன் என தாராள மனசுக்காரராக பேசினார்.. அப்போது அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும்போது, வேட்பாளராகிய நீங்கள் முதலில் உங்களுக்கு வேட்பாளராக சீட் வாங்கித் தந்தது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ தான் என ஊர் முழுக்க பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.. இது நல்லதல்ல. உங்களுக்கு சீட்டு தந்தது தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் சீட் தந்தார். நீ “ஆணைய கிழிக்க வா” “பூனையை கிழிக்க வா”, “ஆற்றை கடலில் விடவா” என தேர்தலில் வெற்றி பெற்று வருவதற்கு முன்பே நடக்கப்போவதை சிந்திக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தனது சொந்த மருமகனும், அதிமுக வேட்பாளருமான சிவசாமி வேலுமணியிடம் கடுப்பில் பேசினார்.. மேலும் உடன் இருந்த வேட்பாளர் அமைச்சர் பேச்சை கண்டு அதிர்ந்து போன விரக்தியில் நான் அதைத்தான் கூறியிருந்தேன் என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரின் அருகில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் சமாளித்தார்.
உடனே மீண்டும் கடுப்பான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் “இந்தா மைக்கை பிடி” என வேட்பாளரான சிவசாமி வேலுமணியிடம் மைக்கை கொடுத்துவிட்டு கடுப்பில் அவரின் இடத்திற்கே சென்று அமர்ந்து விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் சொந்த மருமகன் என்றாலும், அமைச்சரின் இந்த கடுகடுப்பான பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.