Thupparithal
அரசியல்

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு; தேர்தல் காலத்தில் எதிர்ப்பை காட்டாமல் இப்போது காட்டுகிறார்கள்.. பின்னால் மறந்து விடுவார்கள்…சரத்குமார் தூத்துக்குடியில் பேட்டி…!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் இன்று மாலை நெல்லையில் நடைபெற இருக்கிறது.. இதில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார்… அப்போது அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 2024 பாராளுமன்றத் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதற்காக நெல்லையில் பொறுப்பாளர்களை இன்று அறிவிக்கின்றோம்..

சென்னையில் மழை; சென்னையில் மிகப்பெரிய மழை பாதிப்பு, 76 ஆண்டுகள் சுதந்திரம் பெற்றும் கூட பல மாநிலம் முழுமையாக அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் உள்ளது.. சென்னையை பொறுத்தவரை குறை சொல்ல கூடாது.. ஆனால், குறை சொல்ல வேண்டிய நிலை தான் உருவாகி இருக்கிறது. மக்கள் படுகின்ற வேதனை ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை, நாம் உதவி செய்வதென்றால் வீட்டை விட்டு போக முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.. தொலைதொடர்பு துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு.. இந்த ஒரு சூழலில் மிகப்பெரிய பாதிப்பு, இழப்பை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தொடர்ந்து இது போன்ற நிலைமை வரவிடாமல் தடுக்க வேண்டும்… பேரிடர் காலங்களில் மிகப்பெரிய மீட்பு படையை உருவாக்க வேண்டும்.. மக்களை சென்று அடைய இதுவரை எந்த உதவியும் அரசு செய்யவில்லை என்பது தான் நிதர்சன உண்மை.. மக்கள் இந்த வேதனையில் மனதை திடப்படுத்திக் கொண்டு சகித்துக் கொண்டு எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த எதிர்ப்பை தேர்தல் காலத்தில் காட்ட மாட்டார்கள். தேர்தல் காலத்தில் காட்டாமல் இப்போது காட்டுகிறார்கள் பின்னால் மறந்து விடுகிறார்கள்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தென்தமிழகத்தை பார்க்கும் போது கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. தென் தமிழகத்தில் தொழில் வளம் உருவாக வேண்டும்.. அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறிய அவரிடம் வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? கூட்டணி பற்றி கேட்க வேண்டாம் என்றார்…

Related posts

கோவில்பட்டி, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.45 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Admin

“கலைஞர் நூற்றாண்டு விழா” கோவில்பட்டியில் 100 பெண்களுக்கு முதலமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டையை வாங்கி கொடுத்த நகர மன்ற உறுப்பினர்..!

Admin

விளாத்திகுளத்தில் ஒன்றிய செயலாளர் செல்வி நேதாஜி தலைமையில் டி.டி.வி தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!