Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள யூனியன் வங்கியை மற்றொரு கிளையுடன் இணைக்க முற்படுவதை கண்டித்து வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியான வஉசி சாலையில் சுமார் 25 ஆண்டுகளாக யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது.. நகரின் மையப்பகுதியில் உள்ள ஏராளமான வணிகர்கள், பொதுமக்கள் சுய உதவி குழுவினர் பலர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு இந்த வங்கி வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வங்கி கிளை ஒன்றிணைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த கிளையை மற்றொரு கிளையோடு இணைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி மற்றோரு வங்கியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரை நிகழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுமார் 130 கோடி வருவாய் ஈட்டும் இந்த வங்கியை 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வேறொரு கிளையோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..

Related posts

கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்; தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!.

Admin

நாசரேத் ஆலயத்தில் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளருக்கு வரவேற்பு!

Admin

74வது குடியரசு தின விழா; தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Admin

Leave a Comment

error: Content is protected !!