74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, கடற்கரை சாலையில் உள்ள பெல் ஹோட்டல் அருகில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மூவர்ண கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது, அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான பாட்டாளி பிரான்சிஸ் தலைமையில், செயலாளர் மார்க் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி சத்தியராஜ் கலந்து கொண்டு மூவர்ண கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், 40வது வார்டு பனிமயமாதா கோவில் பகுதி மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது, வஉசி பேரவை மாநில தலைவர் சைவத்திரு கீதா மாரியப்பன், மாவட்ட துணை தலைவர் சாம்ராஜ், அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மார்க்கின் ராபர்ட், சங்க உறுப்பினர்கள் முத்து மாரியப்பன், பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக, மாவட்ட பொருளாளர் எஸ்.டி.கணேசன் நன்றி கூறினார்.