Thupparithal
செய்திகள்

அவசர கோலத்தில் நடந்து முடிந்த குரூஸ் பர்னாந்து நினைவு மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா; அரசு விழா போல் இல்லாமல் சினிமா சூட்டிங் முடித்து விட்டு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கிளம்பி சென்றதாக பொது மக்கள் குற்றச்சாட்டு!.

தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்க வல்லநாட்டில் இருந்து குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது, நேற்று சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பூங்காவனத்தில் நடைபெற்றது.

இதனை திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பங்கேற்று மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டு திறக்கப்பட்டு பொது மக்களுக்கு உரையாற்ற அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக, கட்சி சார்பில் பிரமாண்ட பேனர்கள், அரசு சார்பாக விழா மேடை, பந்தல்கள், இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. மதியம் 2:30 மணி அளவில் கனிமொழி எம்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், 3:20 மணிக்கு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், ஆணையர் சாரு ஸ்ரீ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வந்தனர்.

அப்போது, நேராக அடிக்கல் நாட்டப்பட இருந்த இடத்திற்கு வந்து செங்கலை கொடுத்தார்.. அப்போது அங்கு வந்த கட்சியினர் கனிமொழி எம்பி, அமைச்சர் ஆகியோர் வாழ்க கோஷம் எழுப்பினர். பின்னர், அங்கிருந்து கிளம்பி பாதி தூரம் வந்த நிலையில், கல்வெட்டு வடிவில் உள்ள பேனரை திறக்க வேண்டும் என நிர்வாகிகள் கூற பின் அங்கு கல்வெட்டு பதிக்கப்படாமல் பேனர் மூலம் தயார் செய்யப்பட்டு இருந்ததை திறந்து வைத்தார்.

பின் அருகிலேயே அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த குரூஸ் பர்னாந்து திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யாமல் அங்கிருந்து வேக, வேகமாக கிளம்பி சென்றார்.

அரசு நிகழ்ச்சி துவங்கும் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவது வழக்கம், அதேபோல் நிகழ்ச்சி முடிந்த பின் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி முடிக்கப்பட வேண்டும். ஆனால் அது போன்று எந்த மரபும் கடைபிடிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வு, அங்கு இருந்த பொது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்ததையும் ஏற்படுத்தியது. ஆகவே, அங்கிருந்த மக்கள் முகம் சுளித்து கொண்டு
சினிமா பட பாணியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் நடித்து முடித்து விட்டு கிளம்பி சென்றதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள ராமேஸ்வரத்தில் இருந்த வந்த சேனாதிபதி என்பவர் கூறுகையில், தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவானது, நாடக நிகழ்ச்சி மாதிரி இருந்தது. அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெறவில்லை, மேடை நிகழ்ச்சிகள் இல்லை, கல்வெட்டு பதிக்கவில்லை, பேனரில் பெயர் எழுதி வைத்து விட்டு அவசர கதியில் உடனடியாக திறந்து விட்டு போய்விட்டனர்.

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது மகிழ்ச்சி தான், ஆனால் நாங்கள் தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து எதிர் பார்ப்புடன் கலந்து கொண்டோம். ஆனால் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் செய்தது மிக பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக கூறினார்.

Related posts

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Admin

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் : ஆட்சியர் தகவல்

Admin

கோவில்பட்டி அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனுமதியின்றி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!