Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக புதிய மின்மோட்டார் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க தமிழக அரசு அறிவித்தபடி 2022-23ம் நிதியாண்டில் “மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வழங்குதல்” திட்டத்தின் கீழ் அரசாணை வரப்பெற்று வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்த மொத்தம் 190 எண்களுக்கு ரூ.10,000/- வீதம் ரூ.19.00 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.

இதில், ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறு/ திறந்த வெளி கிணறு/ குழாய் கிணறு அமைத்து 10 குதிரைத் திறன் வரை புதிய மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்களுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/- இதில் எது குறைவோ பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும். தலைமைப் பொறியாளர் (வே.பொ.), சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்மோட்டார் பம்புசெட்டு வாங்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ), 4/122ஏ, ஸ்டேட் பாங்க் காலனி (வடக்கு), தூத்துக்குடி (9655708447) அலுவலகத்தையும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ), 650கே3, சிவா விக்னேஷ் மகால் அருகில், தெற்கு திட்டங்குளம், கோவில்பட்டி (9443276371) அலுவலகத்தையும்

ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் திருச்செந்தூர் உபகோட்ட உதவி செயற் பொறியாளர் (வே.பொ), 65/10சி, முத்துமாலை அம்மன் கோவில் தெரு, திருச்செந்தூர் (9443688032) அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு-குறு விவசாயி சான்று, வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் மின் இணைப்பு அட்டை ஆகிய உரிய ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பத்தினை சமர்ப்பித்து பதிவு செய்து பயனடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர் மு.மணிகண்டன்

Related posts

திமுக அரசை கண்டித்து அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தியும் , காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டும் நூதன போராட்டம்.

Admin

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

Admin

வாக்குப்பதிவு மையத்தில் அதிமுக வேட்பாளரின் முகம் மற்றும் சின்னம் அடங்கிய மாதிரி வாக்குப்பதிவு அட்டவணை; கையும், களவுமாக பிடித்த மேயர் ஜெகன்…!

Admin

Leave a Comment

error: Content is protected !!