தூத்துக்குடி, ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நல்லாயன் செவித்திறன் குன்றியோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வோதயா தினத்தினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பள்ளியின் தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர் வரவேற்றார். நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சண்முகப் பிரியா, பேரா.யோகேஸ்வரி நித்யா மற்றும் பேரா.கலையரசி ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடைகள் வழங்கினர்.
நாட்டுநலப்பணி திட்ட மாணவிகள் மற்றும் செவித்திறன் குன்றிய மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்