Thupparithal
செய்திகள்

தமிழகத்தில் பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத கோவில்பட்டியில் அண்ணாமலைஅதிரடி!.

தமிழகத்தில் பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை உள்ளது அதை வரும் பொங்கலுக்கு பார்க்கத்தான் போகிறார்கள் கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக மாற்றத்திற்கான மாநாட்டில் அண்ணாமலை பேச்சு…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புத்தூரில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அணி பிரிவு சார்பில் மாற்றத்திற்கான மாநாடு வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னகேசவன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், தேர்தல் வர 17 மாதங்கள் உள்ளது.. 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. டார்க்கெட் வைத்து கல்லா கட்டும் அமைச்சர்கள் தமிழகத்தை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றியுள்ளனர். டாஸ்மாக்கில் 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது.. ஆண்டுகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது.

லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியதா நிலை தான் தமிழகத்தில் உள்ளது திமுக அமைச்சர்கள் பேசுவதை பார்க்கும் போது அங்கு சமூக நீதி இல்லை.. பால் விலை, மின்சார கட்டணம் உயர்த்தியதால் மகளிருக்கு பாதிப்பு, மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்தால் ஓசி பயணம் என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். வெள்ளைக்கார அரசு போல் திமுக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது

நெல் கொள்முதல் செய்ய தமிழக அரசு விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கிறது. கப்பம் கட்டி தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர்

பாலுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதாக ஒரு வாய்கோளறு அமைச்சர் கூறுகிறார். மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று முதுகெலும்பு இல்லாத அரசு கூறுகிறது
வடிவேலு கிணத்தை காணும் என்பது போல அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணும் 1, கோடியே 20 லட்சத்தை காணும்… அணி மட்டும் தான் உள்ளது..

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பிரச்சினை குறித்து கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் பேசியது இல்லை…சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது சாமானிய மனிதர்களுக்கான காலம் பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் அதற்காக நாம் பாடுபட வேண்டும் என கூறினார்.

Related posts

தூத்துக்குடி கோவில் அறங்காவலர்கள் நியமன ஆணையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

Admin

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அதிமுக நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Admin

Leave a Comment

error: Content is protected !!