Thupparithal
செய்திகள்

தூத்துக்குடியில், நடிகர் ரஜினிகாந்த் 73வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கர்ப்பிணி பெண்களுக்கு 21 சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி ஒருங்கிணைந்த கலை மன்றங்கள் சார்பில் 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மணி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் செயலாளர் இரவி, தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இணை செயலாளர் குமாரவேல் ( Rtd.ADSP), தவமணி, கலீல், பெரியசுவாமி, ஆகியோர் முன்னிலையில், 73 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி 21 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

முதலாவதாக, ஜெயம், முருகன், பொன்முருகன், லெனின், ராமமூர்த்தி, தேவராஜ், ரஜினிசெல்வம், ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலும், 73 கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலைகளும், 73 குங்கும சிமிழ்களையும் லதா ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, திரை சிற்பி மன்றம், புரட்சி வேந்தன் மன்றம், இதய ரோஜா மன்றம், எஜமான் மன்றம், பாஸ் ஆப் தி மாஸ் மன்றம், கோல்ட் கிங் மன்றம், லவ் லீடர் மன்றம், வேலைக்காரன் மன்றம், அருணாச்சலம் மன்றம், டைகர் மன்றம், முத்து கைப்பந்து கழகம், மனிதர் திலகம் மன்றம், மாவீரன் மன்றம், வானவராயன் மன்றத்தினர் இணைந்து செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது.

Related posts

76வது சுதந்திர தின விழா; அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை; முன்னாள் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி பொது மக்களுக்கு இலவசமாக அளிப்பதற்கு தேசிய கொடி வாங்கினார்.

Admin

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

Admin

தூத்துக்குடி அருகே பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட அய்யங்கார் பேக்கரி மூடப்பட்டது. கடந்த 2 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கடைகள் மூடப்பட்டது: எந்தெந்த கடைகள் மூடப்பட்டது என்பது குறித்தான முழு தகவல்…

Admin

Leave a Comment

error: Content is protected !!