தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் பொன்ராஜா, நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்ற கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் கொடுத்த விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து, பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர், பாரதிசங்கர் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளான ரூ.5,000 இளநிலை பொறியாளர் பொன்ராஜாவிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.