தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மற்றும் பப்ளிக் பவுண்டேஷன் நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் ரத்ததான முகாமானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, TCOA தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் தாலுகா இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
TCOA மாநிலத் துணைத்தலைவர் ராஜேந்திர பிரபு தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், இளைஞர்கள் பலர் தாமாக முன் வந்து ரத்த தானம் அளித்தனர்.
பின்னர், ரத்த தானம் நன்கொடை அளித்த இளைஞர்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.