Thupparithal
செய்திகள்

மார்ச் 21 காடுகள் தினம்; தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் கை வண்ணத்தில் அழகிய சுவரோவியம்;

காடுகளை பாதுகாப்பது மற்றும் வளங்குன்றாமல் பயன்படுத்துவது என்பது நமது பூமியையும் நம்மையும் பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

மக்களின் வாழ்வாதரம், ஊட்டச்சத்து மற்றும் பல்லுயிர்களுக்கான வாழ்விடம் மட்டுமின்றி ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என அனைத்திற்கும் காடுகள் இன்றியமையாதவை. பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் காடுகளை அழிப்பதில் ஈடுபட்டு வருவது காடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கையில்தான் உள்ளது.

இதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி சர்வதேச காடுகள் தினமாக உலக நாடுகள் அனுசரித்து வருகிறது. சர்வதேச காடுகள் தினம் 2023 மார்ச் 21 தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வனத்துறை, தூத்துக்குடி கோட்டம், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், மணிமுத்தாறு, தூத்துக்குடி ரோட்டரி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மற்றும் முத்து நகர் இயற்கை அமைப்பு ஆகியவைகள் இணைந்து வல்லநாடு உயிரிபல்வகைமையை கொண்டாடுவோம் என்ற கருப்பொருளில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்க மைதான சுற்றுச்சுவரில் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் காணப்படும் உயிரினங்களின் ஓவியங்களை அழகாக வரைந்தனர்.

இந்ந நிகழ்ச்சியை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சி. தினேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், ஆகியோர் தொடங்கி வைத்தனர். வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் காணப்படும் பாலூட்டி இன விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், ஊர்வன வகை விலங்குகள் என 30க்கும் மேற்பட்ட உயிரினங்களின் ஓவியங்களை மாணவர்கள் வரைந்தார்கள்.

நிகழ்ச்சியில், அந்தோனி அதிஷ்டராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர், தூத்துக்குடி, ரோட்டரி சங்கத் தலைவர் மலர்விழி, ரோட்டரி சங்க செயலாளர் பிரத்திமா, ரோட்டரி சங்க பொருளாளர் பிரேமா மற்றும் முத்து நகர் இயற்கை அமைப்பின் தலைவர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அழகர் பள்ளி, சக்தி விநாயகர் இந்து வித்யாலயம் பள்ளி, எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மற்றும் கிடிஸ் வேர்ல்டு ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு ஓவியங்களை தீட்டினார்கள். ஓவியர்கள் கார்த்திகா, ராஹினி, தணிகைவேல், குணசேகரன் மற்றும் ஆரோன் மார்ட்டின் ஆகியோர் மாணவர்களை சுவரில் ஓவியங்களை வரைவதற்கு வழிநடத்தினார்கள்.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை, ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் பாலமுருகன், முன்னாள் தலைவர் டாக்டர் புளோரா மற்றும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் செய்திருந்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டுயிர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சுவரோவியங்கள் மாநகராட்சி மற்றும் வனத்துறை ஒத்துழைப்பில் வரையப்பட உள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

Related posts

21-ம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு நிலைமையா? – குடிசை வீட்டில் இருளில் தவிக்கும் மீனவ மக்கள் – பட்டாவிற்காக 18 ஆண்டுகளாக அலைகலைக்கும் அரசு அதிகாரிகள்!

Admin

தூத்துக்குடியில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் எஸ். ஆர்.பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Admin

கோவில்பட்டியில் மாடர்ன் ஹார்டு வேர்ஸ் புதிய கடையை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!