Thupparithal
இந்தியா

இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது; தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை!.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர் அங்குள்ள மக்கள், இதனை தடுக்க இந்திய பாதுகாப்பு படை, உளவுத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருள், விவசாய விளைப்பொருள்கள், மருந்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து கடத்துவதை தடுக்கும் பணியில் கியூ பிரிவு, மரைன் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கடலோர காவல் படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் ‘ஐ.சி.ஜி.எஸ். ஆதேஷ்’ ரோந்து கப்பலில் உதவி கமெண்டர் நீரஜ் வர்மா, துணை கமெண்டர் கிருஷ்ணன் தலைமையில், நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இந்திய கடல் பகுதியான, கன்னியாகுமரியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து, உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த படகில் இலங்கை கொழும்பு, பெருவளை பகுதியை சேர்ந்த முகமது ரசாத், நுவான், பத்திரங்கே ருவன் ஜெயலால், மதுரங்க சைமன்மேரு, முகமது ரஹ்மான், ஆகிய 6 மீனவர்கள் இருந்தனர்.

பின்னர், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 6 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், படகையும், 6 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், கடலோர காவல் குழும டிஎஸ்பி பிரதாபன் தலைமையிலான போலீசார் ஆய்வாளர் சைரேஸ், மற்றும் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, 6 இலங்கை மீனவர்களும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என காவல்துறையினர் தெரிவித்தனா்.

Related posts

தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவில் சிறைபிடிப்பு; ஒன்றிய அரசு உதவிகள் செய்து மீட்க வேண்டும்-கனிமொழி எம்பி பேட்டி…!

Admin

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேர் மாலத்தீவில் சிறைபிடிப்பு…!

Admin

Leave a Comment

error: Content is protected !!