தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தருவை குளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் கடந்த அக்டோபர் 1ம் தேதி விக்னேஷ், உதயகுமார், மைக்கேல்ராஜ், செல்வசேகரன், அந்தோணிகிறிஸ்டோபர் , பரலோக திரவியம், அன்பு, ஆதிநாராயணன் , மகேஷ் குமார், மாதேஷ் குமார், மணி, சக்தி உட்பட மொத்தம் 12 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்..
இந்நிலையில், கடலுக்குள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது கடந்த 23.10.2023 அன்று திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்று விட்டனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் படகையும் பறிமுதல் செய்தனர்.