Thupparithal
அரசியல்

மதரீதியாக ஜாதி ரீதியாக தேவையில்லாத ஒரு சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது -மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி…!

தூத்துக்குடியில், கட்சி நிர்வாகியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.. திருமண மஹாலில் மன மக்களுக்கு தன் கையால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து வாழ்த்தினார்…

பின்னர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், ஆளுநர் மாளிகைக்கு முன்நடந்த சம்பவத்திற்கு கண்டிப்பாக நடவடிக்கை தமிழக அரசு எடுப்பார்கள். சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து இருக்கிறார்கள். முன்னுதாரணமாக இந்த நடவடிக்கை இருக்கும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு..

மதரீதியாக ஜாதி ரீதியாக தேவையில்லாத ஒரு சர்ச்சைகளை பாஜக கிளப்புகிறது..குறிப்பாக இளைஞர்களை பொறுத்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருக்கிறது.. ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொள்கிறார்.. சமீபத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதை சொல்லியிருக்கிறார்.. இது அப்பட்டமான பொய். மருது பாண்டியர் நினைவு நாள் அன்றைக்கு அமைச்சர்கள் ஐந்து பேர் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள். சங்கரய்யா 102 வயது வரை இருந்தார்.. வெள்ளையனை வெளியேற்ற 9 வருடம் சிறையில் இருந்து இருக்கிறார். அதனால் அவருக்கு கல்வி கிடையாது கல்லூரிக்கு போக முடியவில்லை. சுதந்திர போராட்ட வீரர் சங்கரஐயா-விற்காக டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் ஆளுநர்.. நவம்பர் 2ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. இதுவரைக்கும் ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறர். மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே கொன்றார்.. அந்த மாதிரி இயக்கங்களுக்காக ஆளுநர் ஏஜெண்டாக செயல்படுகிறார்..

பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக இந்திய கூட்டணி தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறும். அதற்கு முன்னுதானமாக 5 மாநில தேர்தல் ரிசல்ட் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.. 45 வருஷத்தில் இல்லாத பண வீக்கம், பொருட்களின் விலை ஏற்றமடைந்துள்ளது.

ஆரியத்தை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.. அண்ணாமலை கூறுவது போல் சொன்னால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தான் குப்பையில் போட வேண்டும். ஏனென்றால் ஆரிய சர்ச்சையை கொண்டு வந்தது இவர்கள் தான். திராவிடம் இன்று அல்ல வெள்ளைக்காரனுக்கு முன்பே ஆயிரம் வருடத்திற்கு முன்னரே திராவிடம் தமிழ் மொழி பேசுபவர்கள் தான்.. தென்னிந்தியாவில் வாழ்கிறவர்கள் திராவிடர்கள். ஆயிரம் வருடத்திற்கு முன்னே கல்வெட்டுகளில் இருக்கிறது..

மதிமுகவை பொருத்த அளவிற்க்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தான் நாங்கள் பார்க்கின்றோம். முதலமைச்சர் கூறியது போல் யார் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, கூடாது, யார் வெற்றி பெறக் கூடாது என்பதுதான்.. . 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிற்க தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் கிடையாது. கட்சி தலைமை தொண்டர்கள் முடிவு தான். அண்ணாமலை சிறந்த ஒரு காவல்துறை அதிகாரி உழைப்பை நான் பாராட்டுகிறேன். தவறான சித்தாந்தத்திற்காக தவறாக உழைப்பை செலுத்துகிறார். உழைப்பு விரையமாகி கொண்டு இருக்கிறது. மேலும், அவருடைய செயல்பாடுகளை பொறுத்த அளவிற்கு சராசரி அரசியல்வாதியாக தான் பேசுகிறார் என்றார்…

Related posts

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தாசில்தாரிடம் சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினார்.

Admin

பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள உறவு பற்றி சந்தேகம்; தூத்துக்குடி மாநகர காங்கிரசாரின் நூதன போராட்டத்தில் கல்லுரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு அஞ்சல் போட்டியில் மனு!.

Admin

தூத்துக்குடி, மாநகர பாஜக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!