Thupparithal
அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி – பஞ். தலைவர் சரவணக்குமார் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ்-திமுக மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் மேனகா நவநீதன் ஆகியோர் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சவேரியார்புரம் பிரதான சாலையில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இக்கொண்டாடத்தில், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், தொம்மை சேவியர், மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்; பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சேசுராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைக் கழக செயலாளர்கள் காமராஜ், ஜேசு, உலகநாதன், கிராஸ், காசி, ஆசைத்தம்பி, சந்தனராஜ், மணி, இராயப்பன், தங்கபாரதி, பொன்னுச்சாமி, வேல்ராஜா, மாரியப்பன், முருகன், வேல்ராஜ், மைக்கேல்ராஜ், ஆனந்த், பிரன்ஸிகர் மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டிற்கு பின் தமிழகத்தில் முதன்மை இயக்கமாக அதிமுக மாறிவிட்டது.. இனி ஓபிஎஸ் கூடாரம் காலி -கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி..

Admin

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

Admin

திமுக MP கனிமொழி ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று கலைஞர் சமாதியில் சத்தியம் செய்யட்டும்.. தூத்துக்குடி தொகுதியில் டெபாசீட் வாங்க மாட்டார் என்றும், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி களத்தில் நின்றதால் திமுக எளிதாக வெற்றி பெற்றதாகவும் -அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி காரசாரமாக பேசியுள்ளார்..!

Admin

Leave a Comment

error: Content is protected !!