Thupparithal
அரசியல்

விளாத்திகுளத்தில் பேராசிரியர்’அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரான பேராசிரியர் என எல்லோராலும் அழைக்கப்படும் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் தலைமை கழகப்பேச்சாளருமான அன்புவாணன், மற்றும் கழக பேச்சாளர் தரம்ஜான்பேகம் ஆகியோர் கலந்து கொண்டு அன்பழகனின் கொள்கை குறித்தும் கழக ஆட்சியின் சாதனை குறித்தும் கூட்டத்தில் பேசினர்.

கூட்டத்தில் மாநிலநெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மிக்கேல்நவமணி,ஞான குருசாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,டேவிட்ராஜ் உட்பட மாவட்ட பிரதிநிதிகள்,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,அணி நிர்வாகிகள்,கிளைச் செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,வார்டு உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

கருணாநிதி பிறந்த நாளையோட்டி துத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Admin

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; 39 வார்டு இளைஞரணி ராஜா சுரேஷ்குமார் சார்பில் கொண்டாட்டம்.

Admin

தேர்தல் பரப்புரை; கனிமொழி-யை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் திடீரென பரோட்டா கடையில் நுழைந்து ஆம்லெட் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Admin

Leave a Comment

error: Content is protected !!