சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வ குலத்தின் கே.எஸ் முத்துச்சாமி ஆச்சாரியின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளியில் தமிழக கம்மாளர் முன்னணி சார்பில், தமிழக கம்மாளர் முன்னணி மாநில பொது செயலாளர் செல்வ சங்கர் தலைமையில், மாநிலத் தலைவர் பாஸ்கரன், மாநில பொருளாளர் வெங்கடேசன் முன்னிலையில், சுதந்திரப் போராட்ட தியாகி கே.எஸ் முத்துச்சாமி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், விஸ்வகர்ம உயர்நிலைப்பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன், விஸ்வகர்ம மகாஜன சங்க செயலாளர் காளியப்பன், விஸ்வ தமிழ் கழகம் நிறுவனத் தலைவர் சுடலைமுத்து, விஸ்வ தமிழ் கழகம் மாநிலச் செயலாளர் சாமி,
விஸ்வ தமிழ் கழகம் மாநில பொருளாளர் சித்திரை முத்து, விஸ்வ தமிழ் கழகம் மாவட்டத் துணைச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொறுப்பாளர் முருகன், வழக்கறிஞர் ஆனந்த், மற்றும் காளிமுத்து, கண்ணன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு கே.எஸ் முத்துச்சாமியின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.