Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அருகே, மின் சிக்கன விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட, ஊரகக் கோட்டத்தின் சார்பில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் 08.12.2022, விளாத்திகுளம் , பேரிலேவன்பட்டியில் அமைந்துள்ள
தி.வெ.அ.நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, கோட்ட உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் தலைமையில் உதவி பொறியாளர்கள்
செல்வகுமார், பிரவீனா, சுரதா, ஜோசப் சுந்தர் மற்றும் களப்பணியாளர்கள் மாணவ ,
மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 850-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தில்
மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு, மின் நுகர்வோர் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்பு எண்ணில் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதல்வர் ரெஜிலா நன்றி கூறினார்.

Related posts

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை பொய்ததால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் வேணடுகோள்.

Admin

தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவாகிய தினம்; மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் மரக்கன்று நட்டு சிறப்பிப்பு!.

Admin

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Admin

Leave a Comment

error: Content is protected !!