தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பருவமழை பொய்ததால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி தற்போது 90. 66 சதுர கி.மீ.பரப்பளவில் 60 வார்டுகளைக் கொண்டது, 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3 லட்சத்து 72 ஆயரத்து 408 மக்கள் தொகை உள்ளது, மாநகராட்சிக்கு வெவ்வேறு திட்டங்கள் மூலம் தற்போது 66.20எம்.எல்.டி. குடிநீர் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்யப்பட்டு 30 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் மாநகர பகுதி மக்களுக்கு சுமார் 600 கி.மீ. பைப்லைன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது, இதில் நிர்வாகப் பணியில் ஈடுபட நிரந்தர குழாய் ஆய்வாளர்கள் 6 உள்ளனர், சிறந்த முறையில் குடிநீரை விநியோகம் செய்ய 4 பொருத்துநர்கள் சி.எல்.சி.மூலம் தற்காலிக அடிப்படையில் உள்ளனர்.
தண்ணீரை சரியான நேரத்தில் மக்களுக்கு பகிர்ந்து அளித்தல் தண்ணீர் கசிதல் மற்றும் உடைப்புகள் சரி செய்தால் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நிர்வாக அனுமதியின்படி ஆண்டுக்கு ரூ.6 லட்சம் தொகையை குடிநீர் வடிகால் நிதி மூலம் வழங்குதலை மாமன்றத்திற்கு தெரிவித்தார்,
மேலும் மாநகராட்சி 60 வார்டுகளில் உள்ள 18,226 தெருவிளக்குகளை இயக்குதல் மற்றும் பராமரிக்க பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பொது நிதியில் ஆண்டுக்கு ரூ.99 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அனுமதி அளித்தல், உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் அனைவருக்கும் பணிகள் குறித்த அடிப்படை பயிற்சி நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 9 பேருந்து நிறுத்த நிழற் கூரைகளில் நவீன முறையில் எல்.இ.டி. திரையில் விளம்பரம் செய்யும் குத்தகை மறு ஏலம் மூலம் புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்தல், நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பழுதான சாலையிலே மேம்படுத்தும் வகையில் 15 வது நிதி குழு மானிய 2023-24- திட்டத்தின் கீழ்ரூ.6,39 கோடி நிதி ஒதுக்கீடு அனுமதி பெறப்பட்டுள்ளதை தெரிவித்தல், 6 வது மாநில நிதிக்குழு நிதியின் ஊக்கத்தொகை நிதி 8,78 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதை அறிவித்தல், மேலும் அதே திட்டத்தின் கீழ் 7.34 கோடியில் பழுதான சாலைகளை சீரமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதை தெரிவித்தல்,
ஜெயராஜ் ரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தை முழுமையாக இடிக்கப்பட்டு சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 10.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக பல அடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் 16 புதிய கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டு தமிழக நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் திறந்து வைக்கப்பட்டது, அங்கு கணினி வசூலித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்களை நியமித்தல். உட்பட பல்வேறு தீர்மானங்கள் வாசித்து விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.