Thupparithal
செய்திகள்

வில்ஹெல்ம் ரான்ட்ஜென் சர்வதேச கதிரியக்கவியல் தினம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

எக்ஸ்ரே வின் தந்தை வில்ஹெல்ம் ரான்ட்ஜென் எக்ஸ்ரே கண்டுபிடித்த தினமான இன்று சர்வதேச கதிரியக்கவியல் தினம் நவம்பர் 8ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கபடுகிறது .

அதை முன்னிட்டு 08/11/22 அன்று அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை சிறப்பாக கொண்டாட நுண் கதிர் துறை தலைவர் மருத்துவர் புளோரா நெல்சன் மற்றும் அத்துறை சார்ந்த மருத்துவர்கள் , நுண்கதிர்வீச்சாள பணியாளர்கள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி இத்தினத்தில் நுண் கதிர் துறையை சார்ந்தவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு குறித்து மருத்துவர்கள் சிறப்பு உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியை, ஜான்சிரானி தொகுத்து வழங்க, தவமணி பீட்டர் வரவேற்புரை வழங்க, ஆசீர் சுந்தர்சிங் நோயாளிகளுக்கு உதவுதல் பற்றி சிறப்புறையாற்றினார்.

மருத்துவர் புளோரா நெல்சன் தனது உரையில் கூறியுள்ளதாவது; மருத்துவத் துறையின் மைல்கல் – உலக எக்ஸ்-ரே தினம் இன்று நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும்.உலகமே கொரோனா தொற்றினால்பரிதவித்த போது இந்த துறை தான் மிகவும் மகத்தான பனி செய்து மக்களை காப்பாற்ற உதவியது என்பதை உலகம் அறியும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல், விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை ‘எக்ஸ்-ரே’ தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய ‘எக்ஸ்-ரே’ பரிந்துரைக்கப்படும்.

இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’. அதேபோல் நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றது ஆகவே நமது அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவிட மேலும் முனைப்புடன் பணி செய்வோம்
என்று தனது உரையில் கூறுகின்றனர்.

இறுதியாக, மருத்துவர் சரவணன் நன்றியுரையாற்றினார்.

Related posts

இயற்கை பாதுகாப்பு 2023 பனை விதைகள் விதைத்தல் விழா மற்றும் சமூக விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது

Admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் மக்களுக்கு எந்த நோயும் ஏற்படவில்லை. சிலர் வீண் வதந்திகள் பரப்பி வருகின்றனர்..மக்கள் நம்ப வேண்டாம்- ஸ்டெர்லைட் ஆலையில் பல வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வந்த பணியாளர்கள் கூட்டாக பேட்டி…!

Admin

கோவில்பட்டி அருகே நாடார் மகாஜனம் சார்பில் ஐ.ஏ.எஸ் அகாடமி திறப்பு விழா- நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கறிக்கோல்ராஜ் பங்கேற்று திறந்து வைத்தார்.

Admin

Leave a Comment

error: Content is protected !!