தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்து வருகிறார். அதனடிப்படையில் வருகிற பருவமழை காலத்திற்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்யும் பணி ஆகியவற்றை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மக்கள் பிரச்சனைகளை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமாரிடம் கேட்டறிந்து அதனை உடனடியாகவும், அப்பகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது;
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளாகும். இந்த சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே தாளமுத்து நகர், டி.சவேரியார்புரம் சாலையில் சரள் மண் அடித்து சரி செய்தல், மாதாநகர், வண்ணார்பேட்டை சாலையில் சரள் மண் அடித்து சரி செய்தல், ஏபிசி கல்லூரி, வடக்கு சோட்டையன்தோப்பு சாலையில் சரள் மண் அடித்து சரி செய்தல் போன்ற பணிகளுக்கான மதிப்பீடு ஒன்றிய பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான போதிய நிதியும் உள்ளது. எனவே தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து மழை காலத்திற்குள் விரைந்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு சாலைகளில் சரள் மண் அடித்து சரி செய்யும் பணிகளை தொடங்குமாறு அறிக்கையில் கூறியுள்ளார்.