தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1 கோடியே 20 லட்சத்து 55, 800 மதிப்பீட்டில் புதிய அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று (25.10.2022) காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், அரசு மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.
அறுவை சிகிச்சை மையமானது நவீன வசதிகள் கூடிய 8 படுக்கைகள் கொண்ட வார்டுகள், மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர அறுவை சிகிச்சை அரங்கம், பணி மருத்துவர் அறைகள், போன்ற நவீன வசதிகள் கொண்டுள்ளன.
நிகழ்ச்சியில், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவர் சைலேஷ், அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ராஜவேல் முருகன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.