தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ரேன்சம் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான கலைவிழாவினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய சிறப்பு பள்ளியை பற்றியும் அவர்கள் திறமையை வளர்ப்பது பற்றியும் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளாத்திகுளம் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வைசண்யா-வால் வரையப்பட்ட ஓவியத்தை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ரேன்சம் பவுண்டேஷன்
ராஜபாண்டி, பேராசிரியர் மகேந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன், வார்டுசெயலாளர் சுப்புராஜ், முன்னாள் தலைமையாசிரியர் ஞானபிரகாசம், சமூக ஆர்வலர்
இளையராஜா, மாரியப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.