Thupparithal
செய்திகள்

தமிழக முதலமைச்சருக்கு பெருமை சேர்க்கும் நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்

தமிழகத்தில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் திருநெல்வேலி மாநகராட்சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுமக்கள் நலன் கருதி அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மாநகராட்சி ஆணையர் ஐஏஎஸ் சிவ கிருஷ்ணமூர்த்தியின் எண்ணமாக இருந்து வருகிறது.

மாநகராட்சி பகுதியில் அனுமியின்றி விதிமுறைகளை மீறி கட்டிட வரைமுறைகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள 26 வணிக வளாகங்கள் மற்றும் 76 குடியிருப்புகளை இடித்து அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உள்ளுர் திட்ட குழுமத்திடம் அனுமதி பெறாமல் அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல பொறியாளர்களின் ஆதரவோடு வணிக வளாகங்கள் கட்டப்படுள்ளதாகவும் இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி வசூல் பாதிக்கப்படுகிறது.

விதிமுறைகள் பின்பற்றாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன. பலர் வெளிநாடுகளில் இருந்து வரும் கறுப்பு பணத்தை திருநெல்வேலியில் முதலீடாக்கி வணிக வளாகங்களை கட்டியுள்ளனர். ஆனால் அதற்கு எவ்வித அனுமதி பெறாமலும்; வரிகள் செலுத்தாமலும் இருந்து வருகின்றனர். இதுகுறித்து அனுமதி இன்றி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காத இரண்டு பொறியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக 481 கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 76 குடியிருப்பு கட்டடங்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த 102 கட்டடங்கள் மீதும் பாரபட்சிமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 56ன் படி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. என்று மாநகராட்சி அதிகாரி ஓருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற கட்டடங்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு, போக்குவரத்து பாதிப்பு என பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்று கூறினார்.

ஓரு மாநகரம் நன்றாக இருந்தால் தான் நாட்டுமக்களும் நன்றாக இருக்க முடியும் அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வரும் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களின் நலன் தான் முக்கியம் என்ற தொலைநோக்கு பார்வையோடு அரசின் நடைமுறைகளை முறையாக செயல்படுத்த வேண்டும். அதே வேலையில் மற்ற மாநகராட்சியை காட்டிலும் திருநெல்வேலி மாநகராட்சி எல்லா வகையிலும் சிறந்த மாநகராட்சியாக செயல்படுகிறது. என்ற நோக்கத்தோடு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சிலர் எதிர்ப்புகளை மீறி சிறப்பாக பணியாற்றும் ஆணையர் ஐஏஎஸ் சிவ கிருஷ்ணமூர்த்தியை பல்வேறு பொதுநல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

தேவர் திருமகனாரின் 115 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை – எம்பி, அமைச்சர், மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

தூத்துக்குடி அருகே பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட அய்யங்கார் பேக்கரி மூடப்பட்டது. கடந்த 2 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கடைகள் மூடப்பட்டது: எந்தெந்த கடைகள் மூடப்பட்டது என்பது குறித்தான முழு தகவல்…

Admin

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

Admin

Leave a Comment

error: Content is protected !!