தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் பின்பு 5:30 மணிமுதல் பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்கள் மூலம் மகா அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்று சென்றனர்.
பின்னர் இன்று மாலை விநாயகர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ரத வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..