தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரணித் தெருவில் அமைந்துள்ள “ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவிலில் 10ம் ஆண்டு கொடை விழா கடந்த 4ம் தேதி நாள்கால் நாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், தீர்த்த குடம் நிரப்புதல், பால்குடம் ஊர்வலம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (அக் 14), மஹாளய அம்மாவாசையை முன்னிட்டு திருக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
“ஸ்ரீ அதிர்ஷ்ட வெற்றி விநாயகர்” “ஐயா ஸ்ரீ செல்வ முனீஸ்வரர்” திருக்கோவில் தலைவர் அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், அதிமுக நிர்வாகிகள் பழனிகுமார், முருகன், கோபி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி பாரதி நகர் மேட்டு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் தசரா குழு சார்பில் 11ம் ஆண்டு தசரா திருவிழா நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கோபி, முருகன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.