அதிமுக 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, உள்ளிட்டோரின் திருஉருவ சிலைக்கு பேரணியாக சென்று கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் திரளானோர் கூடி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன்,நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.